2025ஆம் ஆண்டு அறிவியல் முன்னேற்ற விருது பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஏப்ரல் 5ஆம் நாள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெளியிடப்பட்டது.
இதில் சீன வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க அறிஞர் டேவிட் லியு, மரபணு தொகுப்பாக்கத் துறையில் பெற்ற புதிய சாதனையுடன் உயிரி அறிவியல் முன்னேற்ற விருது பெற்றார்.
இவ்வாண்டின் அறிவியல் முன்னேற்றப் பரிசுகளில், 3 உயிரி அறிவியல் முன்னேற்ற விருதுகள், 2 அடிப்படை இயற்பியல் முன்னேற்ற விருதுகள், ஒரு கணிதவியல் முன்னேற்ற விருது ஆகியவை இடம்பெற்றன. ஒவ்வொரு விருதுக்கும் 30 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்ற அறிவியல் முன்னேற்றப் விருது 2012ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.