பல்வேறு பால் சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு நிறுவனமான ஆவின், தங்களின் சில முக்கிய தயாரிப்புகளின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, இதுவரை ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர், இப்போது ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 500 கிராம் பன்னீர் ரூ.300-ல் இருந்து ரூ.275-க்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லிட்டர் நெய் விலை ரூ.690-ல் இருந்து ரூ.650-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாக ஆவின் அறிவித்துள்ளது.
அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் பொதுமக்கள் நலனில் தீர்மானமான தீர்வு எடுத்துள்ளதாக பாராட்டுகள் எழுந்துள்ளன.