சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் மார்ச் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், சீனாவின் சரக்கு வர்த்தக மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 6 லட்சத்து 54 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 1.2 விழுக்காடு குறைந்தது காணப்பட்டது.
இதில், மொத்த ஏற்றுமதி தொகை வரலாறு காணாத அளவில் உச்ச நிலையை எட்டி, 3 லட்சத்து 88 ஆயிரம் கோடி யுவானாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.4 விழுக்காடு அதிகமாகும். மொத்த இறக்குமதி தொகை 2 லட்சத்து 66 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.3 விழுக்காடு குறைவாகும்.
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிவர மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் கூறுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சீனாவின் அன்னிய வர்த்தகம் சீரான நிலையில் இருந்தது என்றார். மேலும், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் புத்தாக்க ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3 லட்சத்து 69 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2 விழுக்காடு அதிகரித்து, மொத்த அன்னிய வர்த்தக தொகையில் 56.4 விழுக்காட்டை வகித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.