தமிழ்நாட்டில் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் வெற்றிமாறன், “கல்வியை நம்மிடம் இருந்து எடுக்க நினைத்தால், அதனை அதே வழியில் எதிர்க்கணும்.
அதனைத்தான் முதலமைச்சர் கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறார். தன் இன மக்களின் கல்வியை ஆரியம் தடுக்கும் போது அவங்களை எதிர்த்து அடிக்கிறதுள இருக்குடா உங்களின் இன , மொழி பற்று. நாம் உயர்ந்துவிடக் கூடாது என்று தடுக்கும் முயற்சிகள் நடக்கிறது.
கல்வியில் நாம் மிகப்பெரிய பாய்ச்சலில் இருக்கிறோம், தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நன்றி. மாணவர்கள் போல நம்ம எல்லாரும் நன்றியோடு இருக்கணும்” என்றார்.