மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. முதலமைச்சர் வீட்டை தாக்க முயற்சி!

Estimated read time 0 min read

மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை தாக்கியுள்ளனர். இதில், ஆறு பேர் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டனர்.

தற்பொழுது, ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு முதல் மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. இப்படி இருக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர். அது மட்டும் இல்லமல், முதலமைச்சர் மருமகன் ராஜ்குமார் இமோ சிங் வீட்டுக்குள் புகுந்த பொதுமக்கள், அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தீவைத்தனர்.

இதனை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author