சீனாவில் ரகாசா என்ற புயல் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல நகரங்களில் வெள்ள நீர் புகுந்து குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது, காற்றின் வேகத்தில் மக்களின் சொத்துகள் வானத்தில் பறந்தன.
இந்த புயலால் ஏற்பட்ட அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதிகாரிகள் தெரிவிப்பதன்படி, இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். தைவான், ஃபிலிப்பைன்ஸ் வரை இந்த புயல் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
Guangzhou after typhoon Ragasa pic.twitter.com/EbDO5n7k1N
— Shenzhen Pages (@ShenzhenPages) September 25, 2025
ஹாங்காங்கில் வேகமான காற்றுகள் பாதசாரை பாலத்தின் கூரையை கிழித்தெறிந்தன, நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்தன. ஒரு பெரிய கப்பல் கரையில் மோதி கண்ணாடி ரயிலிங்குகளை உடைத்தது. சில இடங்களில் காற்றின் சக்தியால் மனிதர்கள் கூட பறந்தனர். குவாங்ஜூ நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து, சாலைகள் ஆற்றாக மாறியுள்ளன.
Crazy scenes in China due to Typhoon Ragasa pic.twitter.com/iiNuu5r2TT
— Nature is Amazing
(@AMAZlNGNATURE) September 24, 2025
ஒரு வீடியோவில் ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் உயர் கோலைகளை இறுகப் பிடித்து நிற்கும் காட்சி, ஒரு பயணியின் பைக் காற்றில் பறக்கும் தோற்றம் அதிர்ச்சியை ஏற்படுக்கிறது.
இன்னொரு கிளிப்பில், வெள்ள நீர் ஹோட்டல் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, சொத்துகளையும் விருந்தினர்களையும் தாக்கும் காட்சி பயமுறுத்துகிறது. தைவானில் புயத்தால் ஏற்பட்ட ஏரி வெடிப்பில் 17 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்து, சிலர் காணாமல் போயுள்ளனர்.
Glass doors SMASHED by torrent of floodwater
Knocking out hotel guests & everything in its path pic.twitter.com/hYh0brSRTi
— RT (@RT_com) September 24, 2025