சீன ஊடகக் குழுமத்துக்கு கியூபா அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு
எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற
80ஆவது ஆண்டு நினைவு மாநாட்டில்
, கியூபா அரசுத் தலைவர்
டியாஸ்-கேனல் கலந்து கொண்டு
, சீனாவில் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் போது சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்த அவர்
, ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கான எதிர்ப்பில் சீன
மக்களின் மாபெரும் உயிரிழப்பையும்
, உலக பாசிச எதிர்ப்பு
போரில் சீனாவின் முக்கிய பங்குகளையும் இந்த மாநாடு வெளிப்படுத்தியுள்ளது என்றார். மேலும்
, இம்மாநாட்டின் மூலம், சீனாவின்
இராணுவ ஆற்றல் உலகத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளதோடு
,

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், இராணுவம்
ஆகிய துறைகளில்
, சீன ஆயுதப் படைகளின் வளர்ச்சிச் சாதனைகளும்
வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

செப்டம்பர் 4ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கியூபா அரசுத் தலைவர் டியாஸ்-கேனலுடன் சந்திப்பு
நடத்தினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
, உலகளாவிய
பிரச்சினைகளைச் சமாளிப்பதில் கியூபாவும் சீனாவும் ஒத்தக் கருத்துகளைக் கொண்டுள்ளன
எனக் கூறினார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக
, இரு
தரப்புறவின் மேம்பாடு
, குறிப்பாக, பொருளாதாரம், சமூகம், வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புகளை
வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும் பல ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை உருவாக்கியுள்ளதாகத்
தெரிவித்த அவர், கியூபாவின் 2030ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சித் திட்டம்
, சீனாவின் ஆதரவுடன் சீராக முன்னேற்றப்படும் என்பதில்
ஐயமில்லை என்றும் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author