தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக மற்றும் பாஜகவை மீண்டும் அதிரடியாக தாக்கி பேசினார். குறிப்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய் திமுக போன்று பொய் வாக்குறுதிகள் கொடுத்து தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்காது எனவும் எது நடக்குமோ எது நடைமுறையில் சாத்தியமோ அதை மட்டும்தான் செய்வோம் என்றும் கூறினார். நடிகர் விஜய் பேசும்போது புதுசு புதுசா ஏதாவது சொல்லுங்கள் என்று கூறுகிறீர்களே புதுசா என்ன சொல்ல வேண்டும்.
செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும். காற்றில் கல்வீடு கட்டப்படும். அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும். வீட்டுக்குள் விமானம் விடப்படும் என நம் முதல்வர் போன்று அடித்து விடலாமா என்று நக்கலாக கேட்டார். அதன் பிறகு இந்த பாஜக அரசு தமிழ்நாட்டிற்காக என்ன செய்தது. நீட் தேர்வை ஒழித்ததா, கல்வி நிதியை விடுவித்ததா.? எதற்கு பின்னர் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி. இதை நான் கேட்கவில்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள் என்ற அதிமுகவை அட்டாக் செய்தார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீது பொதுமக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது.
அதே நேரத்தில் திமுக குடும்பம் பாஜகவுடன் மறைமுக உறவில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள். மேலும் அடுத்த முறை நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவதாக இருந்தால் அது பாஜகவிற்கு சேரும் ஓட்டு தான். எனவே அடுத்த முறை ஜாக்கிரதையாக வாக்களியுங்கள் மக்களே.
மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே தான் போட்டி. மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக வேண்டுமா இல்லையெனில் உண்மையான மக்களாட்சியை கொடுக்கப்போகும் தமிழக வெற்றிக்கழகம் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார்.