ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பின்னர் பேசிய ஆல்ட்மேன், ஏஐ அமைப்புகள் எதிர்பார்ப்பதை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், 2030 க்குள் அவை மனிதர்களால் தீர்க்க முடியாத சிக்கல்களைக் கையாளக்கூடிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்ற நிலையை அடையலாம் என்றும் கணித்துள்ளார்.
தற்போதைய ஜிபிடி-5 மாடலே தன்னை விடவும் பலரை விடவும் புத்திசாலித்தனமானது என்று கூறிய சாம் ஆல்ட்மேன், ஏஐயின் வளர்ச்சி, தொழில்துறை முழுவதும் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்றார்.
2030க்குள் 40% வேலைகளை ஏஐ காலி செய்யும்; சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
