3ஆவது
சீனச் சர்வதேச விநியோக சங்கிலி முன்னேற்றக் கண்காட்சியின் செல்வாக்கு பற்றிய
அறிக்கையைச் சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்ற மன்றம் 28ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையின்படி, பரவல் அளவு, உள்ளடக்க அளவு, சர்வதேசமயமாக்க அளவு முதலிய
துறைகளில் இக்கண்காட்சி குறிப்பிடத்தக்கவாறு உயர்ந்துள்ளது.
உலகளவில்
விநியோக சங்கிலியைத் தலைப்பாகக் கொண்ட தேசிய நிலையான கண்காட்சியாக சீனச் சர்வதேச
விநியோக சங்கிலிக் கண்காட்சி விளங்கியுள்ளது. 3 முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட
இக்கண்காட்சி, வர்த்தக முன்னேற்றம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு, புத்தாக்க
திரட்டல், படிப்பு மற்றும் பரிமாற்றத்துக்கான முக்கிய மேடையாகப் பங்காற்றியுள்ளது.