தொடர்புடைய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில், பிஒய்டி மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 22 இலட்சத்து 60 ஆயிரமாகும். டெஸ்லா வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில், உலகளாவில் 16 இலட்சத்து 30 ஆயிரம் மின்சார வாகனங்கள் வினியோகிக்கப்பட்டன.
டெஸ்லாவைத் தாண்டி, பிஒய்டி மின்சார வாகனங்களின் விற்பனையில் பிஒய்டி உலகில் முதலிடம் பிடித்துள்ளது.
2025ஆம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை அளவை பிஒய்டி தொடர்ந்து விரிவாக்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு முழுவதும், வெளிநாட்டில் 10 இலட்சத்து 40 ஆயிரத்திற்கு மேலான மின்சார வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 110 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இதில் அடக்கம்.
அதே வேளையில், உள்ளூர் மயமாக்கலை இந்நிறுவனம் அதிகரித்து வருகிறது. தற்போது, தாய்லாந்து, உஸ்பெக்ஸ்தான், பிரேசில் ஆகியவற்றில் நிறுவிய முழு வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் ஏற்கனவே உற்பத்தில் ஈடுபட்டுள்ளன. ஹங்கேரியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் முதலாவது தொழிற்சாலையும் வெகுவிரைவில் இயங்க உள்ளது.
