பாகிஸ்தானுக்குச் சீனா வழங்கியுள்ள முதலாவது தொகுதி உதவிப் பொருட்கள் 28ஆம் நாள், சீனாவின் செங்சோ நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்பட்டன. கூடாரம், கம்பளம் உள்ளிட்டவை இதில் அடக்கம். சீன வான் படையின் இரண்டு Y-20 போக்குவரத்து விமானங்கள் இக்கடமையை நிறைவேற்றியுள்ளன.
இவ்வாண்டின் ஜூன் திங்கள் முதல் இது வரை, பாகிஸ்தானில் கடும் வெள்ள பெருக்கு நிகழ்ந்து, கடுமையான உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனா முதலில் பாகிஸ்தானுக்கு உதவி செய்து, அந்நாட்டிற்கு 20 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அவசர நிதியுதவியை வழங்கியுள்ளது.
பேரழிவுக்குப் பிந்தைய அந்நாட்டின் மறுசீரமைப்புப் பணிக்கு உதவி செய்யும் வகையில், சீன அரசு அந்நாட்டிற்கு கூடுதல் 10 கோடி யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வினியோகித்துள்ளது. மற்றொரு தொகுதி நிவாரண பொருட்களை சீனா தொடர்ந்து ஏற்பாடு செய்து வெகுவிரைவில் பாகிஸ்தானுக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.