சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 28ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோய் சோன் ஹீ அம்மையாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
அப்போது வாங்யீ கூறுகையில்,
செப்டம்பர் திங்கள் துவக்கத்தில், சீன–வட கொரிய அரசுத்
தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நடத்தி, முக்கிய ஒத்த கருத்துக்களை எட்டி, இரு தரப்புறவின் வளர்ச்சிக்கான திசையை வெளிகாட்டியுள்ளனர் என்றார்.
சோய் சோன் ஹீ கூறுகையில்,
இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் அதி உயர் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நடத்தி, சோஷலிசத்தை மையமாக கொண்ட வட கொரிய–சீன உறவுக்கு நெடுநோக்கு வழிகாட்டல் மற்றும் வலிமையான உந்து ஆற்றலை அளித்துள்ளனர் என்றார். சீனாவுடன் இணைந்து, இரு தரப்புறவை மேலும்
புதிய, உயர்வான நிலையில் வளர்ச்சியை விரைவுபடுத்த வட கொரியா விரும்புவதாக என்றார்.