தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
எத்தனை தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பதனை அறிவிப்போம். 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம். Celebrityகளிடம் விவாகரத்து அதிகரித்துவிட்டது. கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கேப்டனுக்காக என்னை மாத்திக்கிட்டேன்” என்றார்.
முன்னதாக நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “லஞ்சம் ஊழல் இல்லாத கட்சி தேமுதிக என விஜயகாந்த் மறைந்த பிறகு மக்கள் உணர்ந்துள்ளனர். மருத்துவம், கல்வி இன்று வியாபாரம் ஆகி விட்டது. இன்றைய அரசியல் கட்சிகள் வாக்கு வங்கியை மட்டுமே நம்பி உள்ளது.
நீட்டை ஒழிப்போம் என திமுக சொன்னது. நீங்கள் என்ன செய்தீர்கள். நீட் தேர்வை ஒழிக்க முடியாது. உலகம் முழுவதும் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வந்து நாள் தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குழந்தை பாக்கியம், உடல்நலம் வேலைக்காக விஜயகாந்த் நினைவிடத்தில் நாள் தோறும் பிராத்தனை செய்து வருகின்றனர். விஜயகாந்த் கனவு லட்சியம் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும். ரெய்டுக்கு ஆளும் கட்சி பயந்து உள்ளனர். 2026ல் தெய்வத்தின் ஆசியோடும் மக்கள் ஆசியோடும் ஆட்சி அமைப்போம்” என்றார்.