கடந்த ஒரு வாரமாக, 80வது ஐ.நா. பொது பேரவையின் உயர் நிலை, கூட்டத்தொடர் நியூயார்க்கில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. கடுமையான நிதிப் பற்றாக்குறை, ஐ.நாவின் செயல் ஆற்றலைப் பாதித்துள்ளது. அலட்சியமாகச் செயல்படுவதை ஐ.நா தவிர்க்க முடியுமா? தற்போதைய உலகம் சிக்கலான மாற்றத்தில் சிக்கியுள்ள நிலையில் ஐ.நா குறித்து மக்களிடையில் கவலை எழுக்கிறது. அதே வேளையில், ஐ.நாவுக்கு மேலதிகமான ஆதரவுகளை பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். உலகளவில் ஐ.நா இன்னும் முக்கிய பங்காற்றி வருகிறது. ஐ.நாவின் முக்கியத்துவம் மீது சந்தேகப்படுத்தப்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
சீன மக்களின் பொது கூற்றுக்களின்படி, துவக்கக் குறிக்கோளை மறக்காமல் இருந்தால் தான் இறுதி இலக்குகளை நிறைவேற்ற முடியும். 80 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு முறை உலக போர்கள் எனும் படிப்பினையைப் பெற்றததன் அடிப்படையில், சர்வதேச சமூகம் மூலம் ஐ.நா நிறுவப்பட்டு, உலகின் ஆட்சி முறையின் புதிய அத்தியாயம் துவயங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில், ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச அமைப்புமுறை மற்றும் சர்வதேச சட்டம் உள்ளிட்ட சர்வதேச ஒழுங்கு எனும் அடிப்படையில், மனித குல சமூகம் ஒட்டுமொத்த அளவில் அமைதியை நனவாக்கி, முன்கண்டிராத அளவில் வளர்ச்சி மற்றும் செழுமையை பெற்றுள்ளது. இதனிடையில், ஐ.நா, உலகின் ஆட்சி முறையின் முன்னணி வழிகாட்டல் ஆற்றலாக திகழ்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஐ.நா பேரவையின் கூட்டத்தொடரில், 80 விழுக்காட்டிற்கும் மேலான உறுப்பு நாடுகள் பாலஸ்தீனம் தனி நாடாகும் என்பதை ஏற்றுகொள்வதன் மூலம், ஐ.நாவின் முக்கிய பங்கு வெளிகாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.