சீனாவின் தாய் யுவான் ஏவு மையத்தில் இருந்து ஜுலை 23ஆம் நாள் காலை 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.
செயற்கைக்கோள்கள், திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதுடன், இந்த ஏவுதல் பணி வெற்றியடைந்துள்ளது.
3 செயற்கைக்கோள்கள், தொலை உணர்வு தரவுகளைப் பெறுவது, வணிக ரீதியான தொலை உணர்வு சேவை வழங்குவது ஆகியவற்றிக்குப் பயன்படுத்தப்படும்.
மீதமுள்ள ஒரு செயற்கைக்கோள், தொலைத் தொடர்பு தொழில் நுட்பச் சரிபார்ப்பு பணிக்காகப் பயன்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.