அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு  

Estimated read time 0 min read

ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4,5ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன.
இடையில் வரும் அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது.
அன்றும் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author