ஒளிமையான மலையிலும் கடலிலும் பொது அழகு பகிர்வு என்ற தலைப்பிலான ஏபெகின் பண்பாட்டியல் பரிமாற்ற நடவடிக்கை 15ஆம் நாள் குவாங்டோங் மாநிலத்தின் ஷென்சென் நகரில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமமும், குவாங்டோங் மாநிலத்தின் அரசும் இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் தொடர்புடைய நாடுகளின் அரசு வாரியங்கள், சர்வதேச அமைப்புகள், செய்திஊடக நிறுவனங்கள் முதலியவற்றின் சுமார் 150 விருந்தினர்கள் இதில் பங்கெடுத்தனர்.
சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானம் எனும் முன்மொழிவு, இப்பிராந்திய ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதற்கு சீனாவின் திட்டம் வழங்கப்பட்டது என்று இதில் கலந்துகொண்டோர் கருத்துக்களை தெரிவித்தனர்.
உலகின் நாகரிக முன்மொழிவை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, ஆசிய-பசிபிக் நாகரிகப் பரிமாற்றத்தின் கூட்டுப் பகிர்வை மேம்படுத்த வேண்டும் என்றும் இதில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
