சீனத் தேசிய விழாமற்றும் நிலா விழா விடுமுறையில்
மற்றும் நிலா விழா விடுமுறையில், எல்லை கடந்த சுற்றுலா
விறுவிறுப்பாகியுள்ளது. விசா விலக்கு கொள்கை, எல்லையிலிருந்து வெளியேறிய போது வரியைத் திருப்பி கொடுப்பது, பணம் செலுத்தலுக்கு வசதி அளிப்பது ஆகிய சலுகைகளினால், சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எல்லைக் கடந்த பயணங்கள்
அதிகரித்துள்ளன. சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகத்தின்
மதிப்பீட்டின்படி, தேசிய விழா விடுமுறை காலத்தில், தினசரி சீனாவுக்கு வெளியே பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும்
சீனாவுக்கு வருகை தந்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை, தினசரி 20 லட்சத்தைத்
தாண்டக்கூடும்.
ச்சூ ஹாய் எல்லை சோதனை
பொது நிலையத்தின் மதிப்பீட்டின்படி, இவ்வாண்டின் தேசிய விழா
மற்றும் நிலா விழா விடுமுறையில், எல்லையை
கடந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 61 லட்சத்து 60 ஆயிரத்தைத் தாண்டக்கூடும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 35 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. தொடர்புடைய புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 12 லட்சத்து 68 ஆயிரத்தை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே
காலத்தில் இருந்ததை விட 27.8 விழுக்காடு
அதிகரித்துள்ளது.