கிராமத்தினர் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பரில் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அக்டோபர் மாதத்தில் இது 5.2 சதவீதமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைதேடி நகரங்களுக்குக் குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிராமப்புற வேலையின்மைத் தற்போது குறைந்துள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பெண்களின் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வருவதால், நாட்டின் தொழிலாளர் சந்தை வலுப்பெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
