அரசு பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை… குழப்பத்தில் பயணிகள்…!!! 

Estimated read time 0 min read

திருச்சியில் அரசு பஸ்களில் நவீன டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு, பயணிகள் தங்களுக்கு தேவையான பஸ்களை எளிதாக அடையாளம் காண உதவுகின்றன. இந்த பலகைகள், பஸ்களின் வழித்தடம் மற்றும் செல்லும் இடங்களை தமிழில் தெளிவாகவும், இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலும் காட்டுகின்றன.

ஆனால், சத்திரம் பஸ் நிலையத்தில் லால்குடி, பெருவளநல்லூர், குமுளூர் வழியாக கொளக்குடி செல்லும் ஒரு அரசு டவுன் பஸ்ஸின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழியில் ஊர் பெயர்கள் தோன்றியது பயணிகளிடையே குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்தபோது, சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து, “திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பஸ்” என கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ வைரலாக பரவ, பரபரப்பு எழுந்தது. போக்குவரத்து துறை விசாரணையில், டிஜிட்டல் பலகையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிழை நிகழ்ந்ததாக தெரியவந்தது.

உடனடியாக இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களின் டிஜிட்டல் பலகைகளையும் ஆய்வு செய்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Please follow and like us:

You May Also Like

More From Author