மதுரை- துபாய்… ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமானசேவை ரத்து

Estimated read time 0 min read

மதுரையில் இருந்து துபாய் செல்ல ஒரே ஒரு பயணி மட்டும் இருந்ததால் துபாய் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையத்திற்கு தினசரி துபாயிலிருந்து காலை 6:40 மணிக்குபுறப்பட்டு சரியாக 10:20 மணி அளவில் மதுரை வந்தடையும். மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இருந்து11:30 மணி அளவில் புறப்பட்டு 2:30 மணி அளவில் துபாய் சென்றடையும்.

இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 11:30 மணியளவில் துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஜெட் விமானம் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ய இருந்ததால் துபாய் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

மேலும் இன்று துபாய் செல்ல இருந்த பயணிக்கு வரும் 26 ஆம் தேதி துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

You May Also Like

More From Author