”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

Estimated read time 0 min read

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இலங்கை கடற்படை அதிகாரிகள்.

மன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகு பறிமுதல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், 8 மீனவர்கள், மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு, மன உளைச்சலை தருகிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது குடும்பங்களின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author