நடிகர் கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் லிப்ட், டாடா, ஸ்டார், கிஸ் போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகர் கவின், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வயதில் இளைய இளைஞன், தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணின் மீது காதலில் விழும் கதையில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hi…
#Nayanthara @VishnuEdavan1 @JenMartinmusic
#Hi pic.twitter.com/RuU8JxPGAv
— Kavin (@Kavin_m_0431) October 8, 2025