ரோலண்ட் கரோஸில் அரினா சபாலென்காவை ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியில் தோற்கடித்து டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் வரலாறு படைத்தார்.
சபாலென்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதன் மூலம், 2025 பிரெஞ்சு ஓபனை கோகோ காஃப் வென்றதோடு, 2015 இல் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு மதிப்புமிக்க களிமண் மைதான பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
21 வயதான இரண்டாம் நிலை வீராங்கனையான கோகோ காஃப் கடினமான தொடக்கத்தைத் தாண்டி திறமை மற்றும் மீள்தன்மை இரண்டையும் சோதித்த போட்டியில் 6-7 (5-7), 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு பிரெஞ்சு ஓபனைக் கைப்பற்றி கோகோ காஃப் புதிய சாதனை
