கொரிய உழைப்பாளர் கட்சி மத்திய ஆணையம் மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சருமான லீ ட்சியாங் சிறப்பு விமானம் மூலம் 9ஆம் நாள் நண்பகல் பியொங்யாங்கின் சுங்ஆன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
கொரிய உழைப்பாளர் கட்சி நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டு வட கொரியாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வார்.