2024ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை தொகை 31870 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாற்றில் மிக அதிக பதிவை எட்டியது.
இது, 2023ஆம் நிதியாண்டில் இருந்ததை விட 29 விழுக்காடு அதிகம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 2024ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு அமெரிக்க அரசு விற்பனை செய்த ராணுவச் சாதனங்களின் மொத்த மதிப்பு 11790 கோடி அமெரிக்க டாலராகும்.
இது 2023ஆம் நிதியாண்டை விட 45.7 விழுக்காடு அதிகமாகும். இதுவும் வரலாற்றில் மிக அதிகப் பதிலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.