இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வாரக் கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபாஜி குகைக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்குத் தியானம் மேற்கொண்டார்.