சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் முதுகு வலியைப் போக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோ மருத்துவமனையில் 82 வயதான சாங் என்ற அந்த மூதாட்டி, கடும் வயிற்று வலியுடன் அவர் அனுமதிக்கப்பட்டார்.
குடும்பத்தாரிடம் இருந்து தகவலை அறிந்த மருத்துவர்கள், அவர் மூன்று தவளைகளை முதல் நாளும், ஐந்து தவளைகளை அடுத்த நாளும் என விழுங்கியதை உறுதி செய்தனர்.
ஆரம்பத்தில் சிறிய அசௌகரியம் மட்டுமே இருந்த நிலையில், வலி மோசமடைந்ததால் அவரால் நடக்கவே முடியவில்லை.
சீனாவில் மூட்டு வலி சரியாக 8 தவளைகளை உயிரோடு விழுங்கிய மூதாட்டி
