தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வரும் ஆசிரியர்கள் அதற்காக தங்களை தயார்படுத்தி கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்துவது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
எனினும், இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது