நடுவானில் திடீர் பரபரப்பு! சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி உடைந்தது..!!

Estimated read time 0 min read

மதுரையில் இருந்து இன்று (அக் 11) அதிகாலை சென்னைக்கு 76 பயணிகளுடம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தின் கண்ணாடியில் தரையிறங்குவதற்கு முன்பு, விரிசல் ஏற்பட்டது. முன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானி கவனித்து, விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது, கண்ணாடியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கண்ணாடி உடைந்ததுக்கு காரணம் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

You May Also Like

More From Author