BJP-யிலிருந்து விலகியதும், தனி கட்சி ஆரம்பிக்க போவது குறித்து அறிவித்தார் அண்ணாமலை  

Estimated read time 1 min read

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.
அந்த அறிவிப்பு வெளியானதும், தன்னுடைய தனிப்பாதை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக பரிசீலித்தும், தலைவர்களிடம் இது குறித்து பேசியும் தான் விலகுவதாக முடிவெடுத்ததாகவும் அறிவித்தார்.
தான் ஒரு இயக்கத்தை (www.wetheleaders.org) ஆரம்பித்து, இளைஞர்களை அரசியலுக்கு தயார்படுத்தி, அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்க தயாராக போவதாகவும் அவர் காணொளி மூலம் அறிவித்தார்.
அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

You May Also Like

More From Author