கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

Estimated read time 0 min read

தொடர் கனமழை காரணமாக வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் வியட்நாம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் சூறாவளி காரணமாகப் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெள்ளம் காரணமாக மத்திய மற்றும் வடக்கு வியட்நாமில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author