சீன-பிரேசில் அரசுத் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 27ஆம் நாள் முற்பகல், அழைப்பின் பேரில், பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், சீன-பிரேசில் பொது சமூகக் கட்டுமானம் மற்றும் இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்குத் தொடர்பு ஆக்கப்பூர்வமாக முன்னேறி வருகிறது. இது, இரு நாடுகளின் வளர்ச்சியும் மக்களின் நலன்களையும் விரைவபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளதோடு, பதற்றமான சர்வதேச நிலைமைக்கு நிதானத் தன்மை அளிக்கும் என்றார்.

நாட்டின் சொந்த இறையாண்மையைப் பேணிக்காத்து, வெளிப்புற தலையீட்டை எதிர்த்து, பிராந்திய மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காப்பதற்கு பிரேசில் ஆற்றியுள்ள பங்குகளுக்கும் சீனா ஆதரவளிக்கும் என்றார்.

லூலா கூறுகையில்,

சீனாவுடன் இணைந்து பல தரப்பு ஒருங்கிணைப்புகளை நெருப்படுத்தி, ஐ.நாவின் அதிகாரத் தன்மையைப் பேணிக்காத்து, பிரிக்ஸ் அமைப்பின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சர்வதேச நியாயம் மற்றும் நீதி, உலகின் அமைதி மற்றும் நிதானம் ஆகியவற்றைக் கூட்டாகப் பேணிக்காக்க பிரேசில் விரும்புவதாக என்றார்.

You May Also Like

More From Author