அதிக ஏஐ பயன்பாடு தொடர்பாக நிபுணர்கள் எச்சரிக்கை  

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மீதான அதிகப்படியான சார்பு மனிதர்களின் விமர்சன ரீதியான சிந்தனைத் திறனை (Critical Thinking) மழுங்கடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இணையச் சூழலும், ஏஐ கருவிகளும் தகவல்களை எளிதாக வழங்குவதால், மனித மூளை கடினமான தேடல்களைத் தவிர்த்து ‘குறுக்குவழிகளை’ (Mental Shortcuts) நாடுகிறது.
இதனால் தகவல்களை ஆழமாகப் புரிந்து கொள்வதற்குப் பதில், மேலோட்டமாகப் பார்க்கும் பழக்கம் உருவாகிறது.
தகவல்களை உள்வாங்குதல், சேமித்தல் மற்றும் மீட்டெடுத்தல் ஆகிய மூன்று முக்கிய செயல்பாடுகளை மூளை செய்கிறது. ஏஐ கருவிகளை அதிகம் பயன்படுத்துவதால், தகவல்களைச் சேமிக்கும் மற்றும் மீட்டெடுக்கும் வேலையை நாம் கருவிகளிடம் ஒப்படைக்கிறோம்.
இது நீண்ட காலத்தில் நமது நினைவாற்றலையும், சிந்திக்கும் ஆற்றலையும் குறைக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author