சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும்,
தலைமையமைச்சருமான லீ ச்சியாங், வட கொரிய தொழிலாளர் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல்
குழுவின் நிரந்தர உறுப்பினரும்
,
தலைமையமைச்சருமான பார்க் டே-சியோங்குடன் அக்டோபர் 11ஆம் நாள் முற்பகல் வட
கொரியாவின் பியொங்யாங் நகரில் சந்தித்து பேசினார்.
அப்போது
லீ ச்சியாங் கூறுகையில், வட கொரியாவுடன் இணைந்து, இரு கட்சிகள் மற்றும் இரு
நாடுகளின் அதியுயர் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களைச் செயல்படுத்தி,
உயர்நிலை பரிமாற்றங்களை நெருக்கமாக்கி, நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி,
ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, சீன-வட கொரிய பாரம்பரிய நட்புப்பூர்வ ஒத்துழைப்பு மேலதிக புதிய சாதனைகளைப் பெறுவதை
முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள், பண்பாடு, கல்வி,
கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளிலான பரிமாற்றங்களை இரு
தரப்பும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை ஆழமாக்க வேண்டும்
என்றும் லீ ச்சியாங் கூறினார்.
பார்க் டே-சியோங் கூறுகையில், சீனாவுடன்
இணைந்து, நாட்டின் ஆட்சிமுறை பற்றிய பரிமாற்றத்தை ஆழமாக்கி, நட்புப்பூர்வத்
தொடர்பை விரிவுபடுத்தி, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு
ஒத்துழைப்புகளின் புதிய நிலைமையை உருவாக்க வட கொரியா விரும்புகிறது என்றார்.