தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வரும் அக்டோபர் 16 அல்லது 17 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையானது வழக்கம்போல் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 92 நாட்களுக்குப் பெய்யும்.
இந்த அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 170 மிமீ ஆக இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை சுமார் 50 மிமீ மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
