பெலாரஸ் அரசுத் தலைவராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லுகாஷேன்கோவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 27ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
நானும் லுகாஷேன்கோவும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, இரு நாட்டுறவை முழு நேர பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக முன்னேற்றினோம். இருதரப்புக்குமிடையிலான அரசியல் நம்பிக்கை தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை கூட்டாக கட்டியமைப்பது உள்ளிட்ட ஏராளமான சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. பலதரப்பு ஒத்துழைப்பு நலன் பெற்றுள்ளது. சீன-பெலாரஸ் உறவின் வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். நாங்கள் உங்களுடன் இணைந்து, இரு நாட்டு பாரம்பரிய நட்புறவை தொடர்த்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இருநாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நலன் வழங்க பாடுபட விரும்புகிறேன் என்றார்.