காசாவிலுள்ள போர் நிறுத்தத்தின்முதலாவது கட்டம் குறித்து பன்னாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்
13ஆம் நாள் எகிப்தின்
ஷார்ம் எல்-ஷெய்க்
நகரில் உச்சிமாநாட்டை நடத்தினர். அதில், எகிப்து அமெரிக்கா, துருக்கி மற்றும்
கத்தாரின் தலைவர்கள் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு
உத்தரவாதம் அளித்துள்ளனர்.
போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ச்சியாக
நடைமுறைக்கு வருவதை உறுதிப்படுத்த, சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும்,
தேவையான அனைத்து வழிமுறைகளையும் வழங்க வேண்டும் என்றும் இவ்வுச்சிமாநாட்டில்
வலியுறுத்தப்பட்டதாக எகிப்து அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளது.