சீன-கொலம்பியத் தூதாண்மையுறவின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதி ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியை அனுப்பினர்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில், இரு நாட்டுறவில் மிகவும் கவனம் செலுத்தி, கொலம்பிய அரசுத் தலைவருடன் இணைந்து இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் ஆழமாக்கி, சீனா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொது எதிர்காலத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.