ஜுன் 1 மற்றும் 2ஆம் நாட்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளியீடு மற்றும் பண்பாட்டுக்கான சீனத் தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் சீன வரலாற்று ஆய்வுக் கழகம் ஆகிய 2 பண்பாட்டுச் சின்னங்களுக்கு அடுத்தடுத்து சென்று களஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பண்பாட்டு மரபு மற்றும் வளர்ச்சி பற்றிய கூட்டத்தில் பங்கேற்று, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்க வேண்டும் என்னும் கருத்தை அவர் முதல்முறையாக முன்வைத்தார்.
வெளியீடு மற்றும் பண்பாட்டுக்கான சீனத் தேசிய ஆவணக் காப்பகம் என்பது, சீனப் பண்பாடுகளின் மரபணு கிடங்கு என அழைக்கப்படுகிறது. இங்கே சீன நாகரிகத்தில் இருந்து தலைமுறைத் தலைமுறையாக பரவி வந்துள்ள மதிப்புமிக்க நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. சீன வரலாற்று ஆய்வுக் கழகம், தேசிய வரலாற்றியல் பற்றிய முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும் சீன நாகரிகத்தின் தோற்றம் பற்றிய ஆய்வு மற்றும் விளக்கத்தை மேற்கொள்வதற்கும் பொறுப்பேற்றுள்ள நிறுவனமாகும். இதனால், இந்த 2 பண்பாட்டுச் சின்னங்களில் களஆய்வு மேற்கொண்டது, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்தது.
சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் மரபு, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஷிச்சின்பிங் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார். அதோடு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் சீன நாகரிகம், சீனத் தேசத்தின் வேராக விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்குவதற்குச் சொந்த பண்பாடு மீது நம்பிக்கை கொண்டு, சொந்த வழியில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.