உலக மகளிர் உச்சிமாநாட்டுடன் இணைந்த “டிஜிட்டல்நுண்ணறிவுகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான
சாதனைகள்
” பற்றிய கண்காட்சி அக்டோபர் 14ஆம் நாள்
முற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின்
மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான யுனெஸ்கோவின்
சிறப்புத் தூதருமான பெங் லீயுவான், ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளர் சிமா சாமி பஹௌஸுடன்
இத்துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின்
மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான யுனெஸ்கோவின்
சிறப்புத் தூதருமான பெங் லீயுவான், ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளர் சிமா சாமி பஹௌஸுடன்
இத்துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது
பெங் லீயுவான் கூறுகையில், டிஜிட்டல் நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களைச் சீனா
ஆக்கப்பூர்வமாக வளர்த்து, மகளிர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை வழிமுறையை
மாற்றிக் கொண்டுள்ளது. மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவது, சர்வதேச
சமூகத்தின் பொது பொறுப்பாகும் என்றார். மேலும், பல்வேறு தரப்பினருடன் இணைந்து,
நடைமுறையாக்கம் மற்றும் தொழில் நுட்பங்களின் மூலம், உலக மகளிர் லட்சியம் புதிய கட்டத்தில்
காலடியெடுத்துவதை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பஹௌஸு
கூறுகையில், உலக மகளிர் உச்சிமாநாட்டை சீனா நடத்துவது, உலக மகளிர் லட்சியத்தின்
வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார். மேலும், சர்வதேச சமூகம் கூட்டாக
முயற்சிகளை மேற்கொண்டு, டிஜிட்டல் நுண்ணறிவுக் காலத்தில், மகளிர் மற்றும் பெண்
குழந்தைகள் பன்முக வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர்
வேண்டுகோள் விடுத்தார்.