கோவா மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ரவி நாயக் (வயது 79) இன்று (அக்டோபர் 15) காலை காலமானார்.
வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், போண்டா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், பலரும் சமூக ஊடகங்களிலும் நேரிலும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்