பீகார்த் தேர்தலை ஒட்டி 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
பீகாரில் நிதிஷ்குமார்த் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், அங்கு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்கு 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி துணை முதலமைச்சர்ச் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர்த் தொகுதியிலும், மற்றொரு துணை முதலமைச்சரான விஜயகுமார் சின்ஹா லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
விரைவில் மீதமுள்ள 30 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.