ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே நேற்று ஏற்பட்ட கோரமான விபத்தில் தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. இந்த துயர சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்தத் துயரச் செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனாதிபதி திரௌபதி முர்முவும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.