ஷிச்சின்பிங்
எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் புத்தகத்தின்
5ஆவது
பகுதியின் ஆங்கிலப் பதிப்புக்கான வெளியீட்டு விழா 14ஆம் நாள் ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இப்புத்தகம் சீனா மட்டுமல்ல,
உலகத்திற்கும் சேர்ந்ததாகுமென அதில் கலந்து கொண்ட சீன மற்றும் வெளிநாட்டு
விருந்தினர்கள் பாராட்டினர். புதிய
யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் குறித்த ஷிச்சின்பிங்கின் சிந்தனையின்
புதிய சாதனைகள் இந்தப் பகுதியில் பன்முகமாகவும் அமைப்பு முறையாகவும் வெளிக்காட்டியுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் சீன
மக்களுக்குத் தலைமை தாங்கி சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றுவிக்கும்
நடைமுறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின்
கட்டுமானத்தை முன்னேற்றும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பங்களித்த சீன
ஞானமும் சீனத் திட்டமும் இதில் முழுமையாக வெளிக்காட்டப்பட்டுள்ளன.