நோபல் பரிசு வென்றவர்கள் அடுத்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படுவார்கள்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இந்த விருதுகளும் அடங்கும்.
வெற்றியாளர்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் அன்னை தெரசா உள்ளிட்ட பிற பிரபல நோபல் பரிசு பெற்றவர்களின் வரிசையில் சேருவார்கள்.
ஒவ்வொரு பரிசும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (கிட்டத்தட்ட $1.2 மில்லியன்), 18 காரட் தங்கப் பதக்கம் மற்றும் ஒரு டிப்ளோமாவுடன் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது
