அக்டோபர் 20 முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு, சர்வதேச சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் 15வது ஐந்தாண்டு திட்டம் பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் முன்மொழிவு இந்த அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 15வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் வழிக்காட்டுக் கோட்பாடுகளும், முக்கிய இலக்குகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சீனாவில், ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து செயல்படுத்துவது, நாட்டின் ஆட்சிமுறை பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அனுபவமாகவும் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசத்தின் முக்கிய அரசியல் மேம்பாடாகவும் திகழ்கிறது. 1953 முதல் 2025ஆம் ஆண்டு வரை, 14 ஐந்தாண்டு திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி, சமூகத்தின் நீண்டகால நிலைத்தன்மை ஆகிய 2 அற்புதமான சாதனைகளைச் சீனா பெற்றது.
சீனா தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த காரணமாக, சர்வதேச சமூகம் சீன ஆட்சிமுறையின் அனுபவங்களை அறிந்து கொண்டு, இதிலிருந்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற விரும்புகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு இதற்கு நல்ல வாய்ப்பு வழங்கியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மற்றும் மக்களே முதன்மை என்ற வளர்ச்சி சிந்தனை, வளர்ச்சிக்கான முக்கியத்துவம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை, சீனாவின் ஆட்சிமுறையின் முக்கிய அம்சங்களாகும்.
அடுத்த 5 ஆண்டுகளாக, சீனா, நவீனமயமாக்கத்தின் மூலம் மேலும் அதிகமான சாதனைகளைப் பெற்று, சொந்த வளர்ச்சியடையும் அதேவேளையில், உலகத்துக்குத் தொடர்ந்து நன்மை புரியும்.
