சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க பிரமுகருமான ஓ.பன்னீர்செல்வம், 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கியமான அரசியல் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
“எனக்கு தனிப்பட்ட இலக்கு எதுவும் இல்லை. இந்நேரத்தில் என்னுடைய ஒரே இலக்கே, அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் அமைப்பதே. அதற்காகவே கூட்டணிக் கட்சிகளை இணைத்து பணியாற்றுகிறேன். அ.தி.மு.க பிரிந்து இருக்கும் அனைத்து பிரிவுகளும் இணைந்து போட்டியிட்டால்தான் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டால் அது அவர்களின் முடிவு. ஆனால், மக்கள் தான் இறுதியில் தீர்மானிப்பார்கள். அதனால்தான் ஜனநாயகமே மிக முக்கியமானது. நடிகர் விஜய் மேடையில் பேசியது அரசியல் பேச்சாகவே இல்லை. மக்களுக்கு ஈர்ப்பு தரும் வகையிலும் இல்லை.
மாநாட்டில் விஜய் தமாசாக பேசினாரா என்று தெரியவில்லை.. எனினும், அவரது பேச்சு எதுவும் எற்புடையதாக எனக்கு தெரியவில்லை” என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.