சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத் துறையின் சொந்த திறனின் வளர்ச்சியை விரைவுப்படுத்தி புதிய தரமான உற்பத்தித்திறனின் வளர்ச்சியை வழிநடத்த வேண்டும் என்ற நெடுநோக்கு திட்டம், வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில், புதிய தரமான உற்பத்தித்திறனின் வளர்ச்சியை வழிநடத்தும் வகையில், எந்த துறைகளில் முயற்சி எடுக்க வேண்டும்?இந்த அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15ஆவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அசல் புத்தாக்கம் மற்றும் முக்கிய தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களை தொழில்துறையுடன் ஆழமாக ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்க வேண்டும். கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைசாலிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். “டிஜிட்டல் சீனா” என்ற கட்டுமானத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் புதிய தரமான உற்பத்தித்திறனின் வளர்ச்சி, சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம், தொழில்துறை மேம்படுத்தல் மற்றும் பசுமை வளர்ச்சி முறை மாற்றம் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாக குறிக்கிறது. இது சீனாவின் உயர்தர வளர்ச்சியை திறம்பட ஊக்குவிப்பதோடு, புதிய உத்வேகத்துடன் உலகிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
